Sunday 26 August 2012

ஆண்ட பரம்பரை

சேர, சோழ, பாண்டிய, பல்லவ, சாளுக்கியர்களாக ஆட்சி செய்த க்ஷத்ரிய இனமான வன்னியகுல க்ஷத்ரியர் களின் சிறப்பு மிக்க வரலாற்றை கூறும் தளம் இது.

வேறெந்த குலத்திற்கும் இல்லாத சிறப்பாக "வன்னியர் புராணம்" என்கிற தனி புராணமே கொண்டது தான் வன்னியர் சமூகம்.

இந்து மதத்தின் பல புராணங்களில் வன்னியர் புராணமும் ஒன்று.

புராண காலம் தொடங்கி நவீன காலம் வரை சீரோடும் சிறப்போடும் ராஜ கம்பீரத்தோடும் நாட்டை ஆண்டவர்கள் வன்னியர்கள்.

பழங்கால வன்னியர்களின் வரலாறே தமிழர்களின் வரலாறு என்று சொல்கிறார் தமிழ் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்.  இவரின் முன்னோர்கள் சேர மழவர்களின் வழி வந்த அரியலூர் சமஸ்தானத்தில் ஆஸ்தான புலவர்களாக இருந்தவர்கள்.

இவ்வாறு வன்னியர்களின் வரலாற்றை பல்வேறு நூல்களில் இருந்தும் அறிஞர் பெருமக்களிடம் இருந்தும் பெற்று இந்த வலைப்பூவில் பதிவு செய்கிறோம்.